ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தை அடுத்து விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து தெலுங்கு அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மாவை இயக்கினார் பாலா. ஆனால் எதிர்பார்த்தபடி படம் வரவில்லை என்று மொத்த படத்தையும் தூக்கி எறிந்ததோடு, வேறு ஒருவரை வைத்து படத்தை இயக்கி வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.
அதன்பிறகு சூர்யாவை வைத்து பாலா படம் இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தனது ‛தாரைத்தப்பட்டை’ படத்தில் வில்லனாக அறிமுகமான ஆர்.கே.சுரேசை வைத்து புதிய படத்தை எடுக்கிறார்.
‛‛பாலா படத்திற்காக தனது உடல் எடையை 73 கிலோவில் இருந்து 22 கிலோ அதிகப்படுத்தி 95 கிலோவாக மாறியிருப்பதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஆர்.கே.சுரேஷ். இப்படம் மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் ரீ-மேக் ஆகும். தமிழில் பத்மகுமார் இயக்க, பாலா, தனது பி.ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கிறார்.

