மெட்ராஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கேத்ரின் தெரசா, கன்னட மற்றும் தெலுங்கு திரையுலகிலும் பிஸியான நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் தற்போது விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி காதலர் தினத்தில் ரிலீசாகிறது.
இந்நிலையில் போயப்பட்டி ஸ்ரீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கேத்ரின் தெரசாவை படக்குழுவினர் அணுகினர். ஆனால் அவர் பாலகிருஷ்ணா போன்ற வயதான ஹீரோவுடன் நடிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டராம். இதனால் கேத்ரின் மீது செம கோபத்தில் இருக்கிறாராம் பாலையா.
படக்குழுவினர் முதலில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை தான் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக்க நினைத்தனர். ஆனால் சோனாக்ஷி நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். இந்நிலையில் கேத்ரின் தெரசாவும், பாலையா படத்தை மறுத்துவிட்டதால், வேறு ஹீரோயினை தேடும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

