தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், மகாநடி படத்திற்கு பிறகு தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டார். இவர் தற்போது மிஸ் இந்தியா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வருகிறது.
இப்படத்தின் கதை இதுதான் என ஒரு செய்தி இணையத்தில் உலாவுகிறது. மிஸ் இந்தியா என்றதும் அழகிப் போட்டி தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இந்த படத்திற்கும் அழகிப் போட்டிக்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம். பேத்திக்கும், தாத்தாவுக்கும் இடையிலான உறவு பற்றிய கதையாம். தாத்தாவின் கனவை நிறைவேற்ற திருமணமாகாத பெண்ணாக கீர்த்தி, தனி ஆளாக ஸ்பெயின் சென்று, அங்கு தொழில் தொடங்கி வெற்றி பெறுவதே படத்தின் கதையாம். திருமணமாகாத இந்திய பெண் வெளிநாடு சென்று சாதிப்பதால், படத்திற்கு மிஸ் இந்தியா என பெயர் வைத்திருக்கிறார்களாம்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நெற்றிக்கண் 2 படத்தில் தனுஷுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார் கீர்த்தி என்ற தகவலும் உலா வருகிறது.

