ஹிந்தித் திரையுலகின் நம்பர் 1 , நடிகரான சல்மான் கான் முதன் முதலாக நாயகனாக நடித்த படம். அப்படத்தில் அவருடைய ஜோடியாக அறிமுகமானவர் பாக்யஸ்ரீ. அப்படம் தமிழிலும் ‘காதல் ஒரு கவிதை’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. ஹிந்திப் படமே சென்னையில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியது.
அந்தப் படத்தில் நடித்த பாக்யஸ்ரீ, அதன் பின் சில ஹிந்திப் படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், பெங்காலி, போஜ்புரி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இருந்தாலும் பாலிவுட்டில் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்தை அவரால் பெற முடியவில்லை.
இப்போது பிரபாஸ் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதற்காக அவருக்கு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

