நடிகர் சிலம்பரசன் தற்போது வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார்.
இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பா.ரஞ்சித் மற்றும் கலையரசனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் பா.ரஞ்சித் அடுத்து சிம்புவை இயக்க உள்ளதாக செய்தி பரவி வருகிறது.
இதுகுறித்து சிம்புவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, அது வெறும் மரியாதை நிமித்தமான, எதேச்சையாக நிகழ்ந்த சந்திப்பு தான் என்றனர். படம் குறித்து எதுவும் பேசவில்லை என அவர்கள் கூறினர்.

