தொகுப்பாளினி ரம்யா இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைளில் ஒருவர். ஆடை படத்தில் நடித்த பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது. தற்போது விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பர்மாவில் உள்ள கோயில் ஒன்றில் அங்குள்ள வழக்கப்படி வழிபாடு நடத்துகிறார். அப்போது அவர் பேண்ட் எதுவும் அணியாமல், கொஞ்சம் நீளமான டீசர்ட் மட்டும் அணிந்திருக்கிறார். தொடை முழுவதும் தெரியும்படியாக அவரது உடை உள்ளது.
இதைபார்த்த நெட்டிசன்கள், மேடம் பேண்ட் போட மறந்துட்டீங்க என கிண்டல் செய்துள்ளனர். மேலும் சிலர், கோயிலுக்கு போகும் போது இப்படியா உடை அணிவது என திட்டியுள்ளனர். ரம்யா சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்திருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

