தமிழ் சினிமாவில் எல்லோராலும் கூர்ந்து கவனிக்கப்படும் காதலர்கள் நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்களுடைய காதல் கடந்த சில ஆண்டாகவே தொடர்ந்து வருகிறது.
திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், இருவரும் அடிக்கடி சுற்றுலா செல்வதுடன் அத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட நயன் – விக்கி காதல் முறிந்துவிட்டதாக தகவல் பரவியது. உடனடியாக அதற்கு விளக்கம் அளித்து இருவரும் முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்த சூழலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் கதையை நானும் சிங்கிள் தான் என்ற தலைப்பில் படமாக எடுக்கிறார் இயக்குனர் கோபி. அட்டக்கத்தி தினேஷ், தீப்தி திவேஸ் நடிக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா செல்வேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நயன் – விக்கி காதலை மையப்படுத்தி தான் இந்த படம் எடுக்கப்படுகிறது என்பதை இயக்குனர் கோபி உறுதி செய்துள்ளார்.

