சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த படம் அரண்மனை. சுந்தர்.சி, வினய், ஆண்ட்ரியா, ஹன்சிகா, லட்சுமி ராய், சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இந்த பேய் படம் மிகப்பெரிய ஹிட்டானது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார் சுந்தர் சி. திரிஷா, சித்தார்த், ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த இந்த படமும் ஹிட் தான்.
இந்நிலையில் சுந்தர்.சி மீண்டும் அரண்மனை கதையை கையில் எடுத்திருக்கிறார். இம்முறை ஆர்யா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர். சுந்தர்.சி, விவேக், யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆண்ட்ரியாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

