திருப்பதி ஏழுமலையான் கோவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கென்று தொடங்கப்பட்டது ஸ்ரீவெங்கடேஸ்வரா என்கிற பக்தி தொலைக்காட்சி. இதன் தலைவராக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தெலுங்கு காமெடி நடிகர் பிருத்விராஜ் நியமிக்கப்பட்டார்.
நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே பழைய பணியாளர்களை நீக்கி விட்டு தனக்கு வேண்டிய 36 பேருக்கு பணி வழங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தற்போது டி.வி பெண் ஊழியரிடம் ஜொள்ளுவிட்டு இவர் பேசிய ஆடியோ வெளியாகி ஆந்திராவையே அதிரவைத்துள்ளது. அங்குள்ள சோஷியல் மீடியாக்களில் வைரலாக அந்த ஆடியோ பரவி வருகிறது. “உன்னை கட்டிபிடிக்க ஆசை, உன்னோடு மது அருந்த ஆசை, என் இதயத்தில் நீ இருக்கிறாய்” என்று ஜொள்ளு விட்டிருக்கிறார்.
இந்த விஷயம் பெரிதாகவே பிருத்விராஜை ராஜினாமா செய்ய சொல்லி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று தனது பதவியில் இருந்து பிருத்விராஜ் ராஜினிமா செய்தார். என்றாலும் பக்தி தொலைக்காட்சியில் இருந்து கொண்டு ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிருத்விராஜை கண்டித்து அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

