96 படத்திற்கு பிறகு த்ரிஷா அதிகம் எதிர்பார்க்கும் படம் பரமபதம் விளையாட்டு. இதில் அவர் சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். அதோடு காதுகேளாத வாய்பேச முடியாத ஒரு குழந்தையின் தாயாகவும் நடித்துள்ளார். அவருடன் நந்தா, ரிச்சாட் ரிஷி, வேல.ராமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன் உள்பட பலர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் கே.திருஞானம் இயக்கி உள்ளார்.
இது ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர் படம். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. கடந்த டிசம்பர் மாதமே வெளியாக இருந்த படம். அப்போது அதிக படம் வெளியானதால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வருகிற 31ந் தேதி வெளியிட இருக்கிறார்கள். படத்திற்கு அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். ஜினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

