தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இவரும் பிரிந்துவிட்டதாக இரு தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது. அதற்கு முக்கியக்காரணம் விருது நிகழ்ச்சி ஒன்றிற்கு நயன் தனியாக வந்தது தான். இதனால் அவர்கள் இருவரின் காதலிலும் விரிசல் ஏற்பட்டு விட்டதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் வைரலானது. ஆனால், தாங்கள் பிரியவில்லை என இருவரும் விளக்கமளித்தனர்.
மேலும், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தனித்தனியே வெளியிட்டு தங்களது காதலை உறுதி செய்தனர். இந்நிலையில் நயன்தாரா மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மிஸ் விக்கிஸ் என்ற உருளைக்கிழங்கு சிப்ஸை கையில் பிடித்து கேமராவுக்கு காட்டியிருக்கிறார். இதன் மூலம் தான் விக்கியின் (விக்னேஷ் சிவன்) மனைவி என்பதை மீண்டும் எடுத்துக் கூறியுள்ளார் நயன்தாரா.

