நாடு வன்முறையோடு அலங்கோலமாக மாறி உள்ளது. இதை சமாளிக்க தேவையானது அன்பு மட்டுமே. அதை வளர்த்து கொள்ள வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பார்த்திபன், மாணவர்களிடம் பேசும் போது கூறியதாவது:
மிகுந்த சிரம்பப்பட்டுத்தான் ஒத்த செருப்பு படத்தை எடுத்திருக்கிறேன். அந்தப் படத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்திருக்கின்றன. பல விருதுகளையும் அந்தப் படம் பெற்றிருக்கிறது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு, அந்தப் படம் அனுப்பப்படவில்லை. இது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது. இன்றைக்கு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது, நாடு அலங்கோலமாக உள்ளது; இதை எதிர்கொள்வதற்கும்; சமாளிப்பதற்கும் அன்பு மட்டுமே தேவை. தோல்வியைக் கண்டு மனம் தளரக்கூடாது; போராடினால் மட்டுமே நிச்சயம் வெற்றி பெறலாம் என்றார்.

