சினிமா திரைப்படங்களை இயக்குவதோடு, வெப் சீரிஸையும் இயக்கத் துவங்கி இருக்கிறார். இது குறித்து, சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், இயக்குநர் கவுதம் மேனன் கூறியிருப்பதாவது:
இரண்டு மணி நேரத்துக்குள் எத்தனை பெரிய சிறப்பான கதையாக இருந்தாலும், அதை அடக்கத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், ஒரு நல்ல படத்தை கொடுக்க முடியும். நீளமான கதை, அதை இரண்டு மணி நேரத்துக்குள் சுருக்க முடியாது என்றால், அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உடனே, வெப் சீரிஸ் பக்கம் வந்து விட வேண்டும்.
அதை பல தொகுதிகளாக பிரித்து, அதை படமாக்கிக் காட்ட வேண்டும். அதில் எந்தத் தவறும் இல்லை. கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி, முழுமையான சுதந்திரத்தோடு, வெப் சீரிஸை எடுக்க முடியும். அதனால்தான், உலகின் முன்னணி இயக்குநர்கள் கூட வெப் சீரிஸ் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பி இருக்கின்றனர். தற்போது இருக்கும் நிலையில், திரைப்படங்களுக்கான மாற்று வடிவமாக வெப் சீரிஸ் உருவாகி இருக்கிறது. வரும் காலத்தில், வெப் சீரிஸ்தான், மிகப் பெரிய வளர்ச்சியை அடையும் என்றார்.

