நடிகை பார்வதி பொதுவாகவே தேர்ந்தெடுத்த செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்றாலும் கடந்த ஒரு வருட காலமாகவே அவரை தங்களது படங்களில் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க மலையாளத் திரையுலகம் தயங்கி வருகிறது. மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட நடிகர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதால் பார்வதியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய பலரும் தயங்குகின்றனர், ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் பார்வதி அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.
தன்னை தேடிவந்து கதை சொன்ன இயக்குனர் வேணுவுக்கு உடனடியாக கால்ஷீட் தந்து ராச்சியம்மா என்கிற படத்தில் நடித்துள்ளார் பார்வதி. ராச்சியம்மா என்பது ஒரு குறும்படமாக உருவாகியுள்ளது. 4 குறும்படங்களை ஒன்றிணைத்த ஆந்தாலஜி படத்தில் இதுவும் ஒரு படம்.. இது சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் உரூப்பின் ராச்சியம்மா என்கிற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த ராச்சியம்மா கதாபாத்திர தோற்றத்தில் பார்வதியின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவி வருகிறது

