கடந்த 2௦12ல் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘த்ரிஷ்யம்’. மலையாள திரையுலகின் வியாபாரத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்திய இந்தப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்க, இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் இவர்கள் இருவரும் ‛ராம்’ என்கிற படத்திற்காக இணைந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மோகன்லால் மற்றும் பாலிவுட் நடிகர் அடில் ஹுசேன் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகியாக முதன்முறையாக மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் திரிஷா.. இவர் இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

