இயக்குநர் ஹரிஷ் சந்தோஷ் இயக்கிய படம் காலேஜ் குமாரா. கன்னடத்தில் வெளியான இந்தப் படம் தற்போது, காலேஜ் குமார் என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இந்தப் படத்தையும் இயக்குவது ஹரிஷ் சந்தோஷே. இந்தப் படத்தில், ராகுல் விஜய் என்ற புதுமுக நடிகர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரியா வட்லமணி நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இவர்களைத் தவிர, நடிகர் பிரபு, நடிகை மதுபாலா ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
இதற்கிடையில், இந்த படத்துக்கான இசையை ஏ.ஆர்.ரஹ்மானிடம் இசைப்பயின்ற மாணவர்கள் இணைந்து இசையமைத்திருக்கின்றனர். படத்தின் இசையை வெளியிட்டு, ட்விட்டரில் இந்தப் படத்துக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்திருக்கிறார் நடிகர் தனுஷ்.

