ரஜினி, நயன்தாரா நடிப்பிலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் உருவாகி இருக்கும் படம் தர்பார். நாளை 9ம் தேதி உலகம் முழுவதும், தர்பார் படம் ரீலீஸ் செய்யப்படவிருக்கிறது. இந்நிலையில், அந்தப் படத்துக்கான புரமோஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. அதே நேரம், இந்த படத்தை வரவேற்று கொண்டாடும் ரஜினி ரசிகர் மக்கள் இயக்கத்தினர், பல்வேறுவிதமான கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருக்கும் ரஜினி ரசிகர் மக்கள் இயக்கத்தினர், தர்பார் படத்துக்காக பிரமாண்டமான வரவேற்பு செட் அமைத்திருக்கின்றனர். அதில், 2021 ரஜினி தரபார் என குறிப்பிட்டு, தலைமைச் செயலகம் போலவும், ரஜினியை முதல்வராகவும் விளித்து, செட் அமைத்திருக்கின்றனர். ரஜினி விரைவில் அரசியல் கட்சித் துவங்கப் போவதாக அறிவித்திருக்கும் நிலையில், ரஜினியை முதல்வராக்கி, இப்படிப்பட்ட செட்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

