தனுஷ், மெஹ்ரின், சினேகா மற்றும் பலர் நடித்துள்ள ‘பட்டாஸ்’ படத்தின் டிரைலர் நேற்று காலை வெளியானது. சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது.
ஒரே நாளில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களின் முன்னோட்ட வீடியோக்கள் வெளியானது. இருப்பினும் ‘பட்டாஸ்’ டிரைலரைவிட ‘சூரரைப் போற்று’ டீசருக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.
நேற்று காலையில் வெளியான ‘பட்டாஸ்’ டிரைலர் 24 மணி நேரத்தில் 24 லட்சம் பார்வைகள் மற்றும் 1 லட்சத்து 80 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுள்ளது. நேற்று மாலை வெளியான ‘சூரரைப் போற்று’ டீசர் 42 லட்சம் பார்வைகள், 4 லட்சத்து 33 ஆயிரம் லைக்குகளுடன் யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தெலுங்கு டீசர் 12 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. தனுஷின் ‘பட்டாஸ்’ படம் வழக்கமான கமர்ஷியல் படமாகவும், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் வித்தியாசமான படமாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

