‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடிப்பதற்காக தன் உடல் எடையைக் கூட்டி குண்டான பெண்ணாக நடித்தார் அனுஷ்கா. அதுவே அவருக்கு எதிராகப் போனது. அதன்பின் அவரால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை.
‘பாகுபலி 2’ படத்திற்காக சில பல கோடிகளைச் செலவு செய்து அவரை ஒல்லியாகக் காட்டினார்கள். அது போலவே தற்போது அவர் நடித்து முடித்துள்ள ‘நிசப்தம்’ படத்திலும் செய்யச் சொல்லி இருக்கிறாராம்.
முன்பை விட அனுஷ்கா கொஞ்சம் உடல் எடையைக் குறைத்திருந்தாலும் சில காட்சிகளில் குண்டாகத் தெரிகிறாராம். அதனால் விஎப்எக்ஸ் மூலம் ‘பாகுபலி 2’ படத்தில் செய்ததைப் போலவே தன்னை டிரிம் ஆக மாற்றி, அழகாகக் காட்ட தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டாராம். அனுஷ்காவின் சொல்லை மீறி முடியாத தயாரிப்பாளர்கள் தற்போது அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்களாம்.

