மலையாள திரையுலகில் கடந்த வருடம் ‘ஹே ஜூடு’ என்கிற படத்தில் முதன்முதலாக நடித்தார் த்ரிஷா. தற்போது மீண்டும் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் என்கிற படத்தில் த்ரிஷா நடிக்கிறார். திரில்லர் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
த்ரிஷ்யம், தம்பி படம் போல இந்த படமும் திரில்லர் பாணியிலேயே அதே சமயம் மாறுபட்ட கதை அம்சத்துடன் உருவாகிறதாம். இந்த படத்தில் த்ரிஷா, டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு எகிப்து, லண்டன் மற்றும் இஸ்தான்புல் ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.

