நட்சத்திர தம்பதிகளான சமந்தா – நாகசைதன்யா ஜோடி முக்கியமான பண்டிகை நாட்களை வெளியூர்களுக்கு சென்று கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் புத்தாண்டை கொண்டாட கோவாவிற்கு சென்றுள்ளனர். சமந்தா சில தினங்களுக்கு முன்பே தனது நண்பர்களுடன் கோவா சென்று விட, நாக சைதன்யா மறுநாள் புறப்பட்டு சென்றுள்ளார்.
ஐந்து நாட்கள் புத்தாண்டை கோவாவில் கொண்டாடி விட்டு ஜனவரி முதல் வாரத்தில் ஐதராபாத் திரும்புகிறார்களாம். தற்போது நாகசைதன்யா சேகர் கம்முலா இயக்கும் லவ் ஸ்டோரி படத்திலும், த பேமிலி மேன்-2 வெப்சீரியலில் சமந்தாவும் நடித்து வருகிறார்கள்.

