தன்னை, நடிகை சஞ்சனா கல்ராணி தாக்கியதாக படத்தயாரிப்பாளர் வந்தனா ஜெயின், பெங்களூரு காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதில், ‘பார்ட்டி ஒன்றில் நானும், சஞ்சனாவும் பங்கேற்று பீர் குடித்தோம். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், சஞ்சனா என்னை கடுமையாக தாக்கினார்’ என, குறிப்பிட்டிருந்தார்.இதற்கு, ‘வாக்குவாதம் நடந்தது உண்மை தான். ஆனால், நான் யாரையும் தாக்கவில்லை’ என, சஞ்சனா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

