ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி – நயன்தாரா ஜோடியாக நடிக்கும், தர்பார் படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன., 9ம் தேதி வெளியாகிறது.இப்படத்தை அமெரிக்காவில் வெளியிடும் உரிமையை, ‘பிரைம் மீடியா மற்றும் ஜி2ஜி1 இன்டர்நேஷனல்’ நிறுவனங்கள் வாங்கி உள்ளன.
இது குறித்து, பிரைம் மீடியாவின் கல் ராமன் கூறுகையில், ”அமெரிக்காவில், ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆகவே, தர்பார் படத்துக்கு, அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் வெளியாவதற்கு, ஒருநாள் முன், ஜன., 8ம் தேதி அமெரிக்காவில், தர்பார் வெளியாகும்,” என்றார்.

