ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் பெரும் வசூல் சாதனை படைத்தன.
‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் ‘பாகுபலி – தி பிகினிங்’ என்றும், இரண்டாம் பாகம் ‘பாகுபலி – தி கன்குலுஷன்’ என்றும் குறிப்பிடப்பட்டு வெளிவந்தன. இந்தப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பை வைத்து ‘பாகுபலி – பிபோர் தி பிகினிங்’ என்ற பெயரில் ஒரு வெப் சீரிஸ் தயாரிக்க திட்டமிட்டனர்.
நெட்பிளிக்ஸ் நிதியுதவியில் ‘பாகுபலி’ படங்களைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் அந்த வெப் சீரிஸை தயாரிக்க ஆரம்பித்தது. அவற்றைப் போட்டுப் பார்த்த போது எதிர்பார்த்த அளவில் தரமாக இல்லையாம். எனவே அவற்றை வெப்பில் வெளியிடுவதை தள்ளி வைத்துவிட்டார்களாம்.

