மோகன்லால் தற்போது சித்திக் இயக்கத்தில் ‘பிக் பிரதர்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட பொது அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.. இதற்காக தற்காலிக சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ள மோகன்லாலுக்கு விரைவில் துபாயில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
ஜிம்மிற்கு செல்பவர்கள் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி கட் அடிக்கும் நிலையில், கையில் கட்டு போடப்பட்டிருந்தாலும் வழக்கம்போல தினசரி ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார் மோகன்லால்.. கைகள் அல்லாமல் கால்களுக்கு மட்டுமே மோகன்லால் தினசரி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. துபாய் செல்வதற்குள் ‘பிக் பிரதர்’ படப்பிடிப்பை முடித்து தரவேண்டி இருப்பதால், வலியை பொருட்படுத்தாமல் நடித்து வருகிறார் மோகன்லால்.

