வால்டர் என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் சிபிராஜ். புதியவரான அன்பு என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க இயக்குனர் கவுதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் விலகிக்கொண்டார்.
இந்நிலையில் அந்த கேரக்டரில் தற்போது நட்டி நட்ராஜை ஒப்பந்தம் செய்துள்ளனர். சரியாக நம்ம வீட்டு பிள்ளை படம் வெளியான சமயத்தில் அவரை சந்தித்து வால்டர் படத்தில் நடிக்க அழைத்தனராம்.. அனால் முழு கதையையும் கேட்டுவிட்டு, தனக்கு திருப்தி என்றால் மட்டுமே நடிப்பதாக சொன்ன நட்டியை வால்டர் கதை ரொம்பவே திருப்திப்படுத்தி விட்டதாம். தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் நட்டி

