2019ம் ஆண்டு சூர்யாவுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. நடித்த இரண்டு படங்களில் என்.ஜி.கே., தோல்வியையும், காப்பான் நஷ்டம் இல்லை என்ற அளவிலேயே அமைந்தது. இதனால் 2020 ஆவலோடு எதிர்நோக்கி உள்ளார்.
அடுத்து சிவா இயக்கத்தில் ‛சூர்யா 39′ படம் உருவாக இருந்தது. ஆனால் ரஜினி படத்தை இயக்க சிவா சென்றுவிட்டதால் இவரது படம் தள்ளிபோகிறது. எனவே ஹரி உடன் கூட்டணி அமைக்கிறார் சூர்யா. இது இவர்களின் கூட்டணியில் உருவாகும் 6வது படமும், சிங்கம் பட வரிசையில் நான்காம் பாகமாகவும் உருவாகிறது. இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

