நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு, நீண்ட இடைவேளைக்குப் பின் ரஜினி உடன் இணைந்து நடிக்கிறார். டுவிட்டருக்கு ஒரு சில வாரங்கள் முழுக்கு போட்ட குஷ்பு, குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக மீண்டும் டுவிட்டரில் களத்தில் இறங்கினார். இந்த விவகாரத்தில் குஷ்புவும், பாஜக பிரமுகரான நடிகை காய்திரி ரகுராமும் டுவிட்டரில் சண்டை போட்டனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும் ஒரு டுவீட் போட்டுள்ளார் குஷ்பு. அதற்கு ஒருவர், ‛‛அம்மா கூத்தாடி தாயே, மும்பை சேரியில் உங்கள் விலாசம் இருக்கிறதே. அது உங்களின் பிறப்பிடம் தானே. அப்புறம் ஏன் பயப்படுகிறீர்கள் ? உங்கள் தந்தை வீட்டை விட்டு விரட்டி விட்டதால் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நினைக்கிறீர்களா ? உங்கள் அம்மாவும், சகோதரனும் கண்டிப்பாக முன்மொழிவார்கள். உங்களிடம் தான் பணம் உள்ளதே?” என பதில் போட்டார்.
இதில் கோபமான குஷ்பு, அந்த நபருக்கு, ‛‛உங்க அம்மா பேரு கூத்தாடின்னு சொன்னதுக்கு நன்றி. உங்களோட பெருந்தன்மை பிடிச்சிருக்கு” என்று கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.

