2017ம் ஆண்டில் வெளியான அருவி படத்தில் நடித்தவர் அதிதிபாலன். எய்ட்ஸ் நோயாளியாக அவர் கொடுத்த பர்பாமென்ஸ் அவருக்கு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று தந்தது. அருவி படம் பார்த்த ரஜினிகாந்த், டைரக்டர் அருண் பிரபு, அதிதிபாலன் ஆகிய இருவரையும் அழைத்து தங்க செயின் அணிவித்து வாழ்த்தினார்.
அதன்பிறகு பல வாய்ப்புகள் தேடிச்சென்றும் எந்த படத்தையும் ஏற்காமல் இருந்து வந்தார் அதிதிபாலன். தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களாக வந்ததால் நடிக்கவில்லை என ஒரு பேட்டியில் கூறினார் அதிதி. தற்போது மலையாளத்தில் மட்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

