தமிழ் நடிகையான சமந்தா, தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தபோது நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண் டார். திருமணத்திற்கு பிறகும் நாகசைதன்யாவுடன் மஜிலி என்ற படத்தில் நடித்த சமந்தா, ஓ பேபி, 96 ரீமேக் படங்களைத் தொடர்ந்து இப்போது தி பேமிலி மேன்-2 என்ற வெப்சீரியலில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் சமந்தா தனது குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்காததால், அவருக்கும் நாகசைதன்யாவிற்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக டோலிவுட்டில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது.
அதாவது நாகசைதன்யா சம்பந்தப்பட்ட படவிழாக்களிலும் அவருடன் கலந்து கொண்டு வந்தார் சமந்தா. ஆனால் சமீபத்தில் நாகசைதன்யாவின் தம்பி ஆதித்யா திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்கவில்லை. அதேபோல் நாகேஸ்வரராவின் பெயரில் தேசிய விருது வழங்கும் விழா நாகார்ஜூனாவில் குடும்ப விழா போன்று வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த விழா சமீபத்தில் நடந்தபோதும் அதில் நாகசைதன்யா மட்டுமே கலந்து கொள்ள சமந்தா கலந்து கொள்ளவில்லை.
இப்படி சமீபகாலமாக நாகார்ஜூனாவின் குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் சமந்தா பங்கேற்காததால் அவருக்கும் நாகசைதன்யாவிற்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், அதன்காரணமாகவே அவர்கள் குடும்ப விழாக்களை சமந்தா தவிர்த்து வருவதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்போதும் தன்னைப் பற்றி வெளியாகும் சர்ச்சைகளுக்கு உடனடியாக பதில் கொடுத்து அதை ஊதி அணைத்து விடும் சமந்தா, இந்த விவகாரத்தில் இன்னும் எந்த பதிலும் கொடுக்காமல் மெளனம் காத்து வருகிறார். அதனால் ஒருவேளை இந்த கருத்து வேறு செய்திகள் உண்மையாக இருக்குமோ என்கிற யூகங்களும் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

