மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை மசோதாவிற்கு எதிராக திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் நாளை சென்னையில் பேரணி நடத்துகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அனைத்து அமைப்புகள், சங்கங்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
முக்கியமாக, இதில் கலந்து கொள்ள நடிகர் சங்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நடிகர் சங்கம் இதில் கலந்து கொள்ளாது என்று அறிவித்து விட்டனர். அதையடுத்து கலந்து கொள்வதாக இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனும் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று விநியோகஸ்தர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த விஜய்யின் தந்தையான டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம், திமுக நடத்தும் பேரணியில் விஜய் கலந்து கொள்வாரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு, விஜய் தற்போது தனது 64வது படத்தின் படப்பிடிப்பிற்காக கர்நாடகாவில் இருக்கிறார். அதனால் அவர் இந்த பேரணியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

