குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும்; எதிர்ப்பாகவும் நடிகர்-நடிகையரும் தங்களுடைய கருத்துக்களை பல்வேறு வகைகளில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை அமலாபால், புது விதமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
சமூக வலைதளப் பக்கத்தில், குடியுரிமைக்கு எதிராக மக்கள் போராடும் படம் ஒன்றை பதிவிட்டிருக்கும் அவர், ஒரு இந்தியப் பெண்மணி கையில் ஒரு பதாகையை ஏந்தியிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த பதாகையில், இந்தியன் என எழுதப்பட்டிருக்கிறது. அந்த எழுத்தில், இந்தியன் என்பது, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், புத்திசம், சீக்கிய மதங்களை உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகை அமலா பாலின் இந்தப் புகைப்படப் பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

