90களில் பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் ஆரம்பித்த பார்த்திபன் வடிவேலு காமெடி கூட்டணி அதன்பிறகு பல வருடங்கள் வரை தொடர்ந்து அதகளம் பண்ணியது.. கவுண்டமணி செந்தில் காமெடி ஜோடிக்கு பிறகு இவர்களது இணை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வெற்றிக்கொடி கட்டு, உன்னருகே நானிருந்தால், காக்கை சிறகினிலே என பல படங்களில் இணைந்து காமெடி கலாட்டா செய்த இந்தக் கூட்டணி கடைசியாக குண்டக்க மண்டக்க என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு வடிவேலுவின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய இடைவெளி விழுந்து விடவே இந்த ஜோடியை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்தனர்.
தற்போது கமல் நடிக்கும் தலைவன் இருக்கிறான் படத்தின் மூலம் மீண்டும் முழுவீச்சில் நடிப்பில் களமிறங்குகிறார் வடிவேலு.. இந்த நிலையில் தான் பார்த்திபன் வடிவேலு சந்திப்பு நிகழ்ந்துள்ளது.. தாங்கள் சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பார்த்திபன், “இன்றைய சந்திப்பு நாளைய செய்தி ஆகலாம்” என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பதையே அவர் அவ்வாறு சூசகமாக குறிப்பிட்டுள்ளார் என ரசிகர்கள் உற்சாகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

