கில்லி படம் வரை நகைச்சுவை, ஆக்ஷன் என கமர்ஷியல் படங்களில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விஜய்க்கு பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக அமைந்தது வேட்டைக்காரன் தான். 2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி பாபுசிவன் இயக்கத்தில் வெளியான வேட்டைக்காரன் படம் இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இதனை விஜய் ரசிகர்கள் ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற புலி உறுமுது, நான் அடிச்சா தாங்கமாட்ட, கரிகாலன் கால போல, சின்னத்தாமரை, என் உச்சி மண்டைல என அத்தனை பாடல்களும், படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. விஜய் ஆண்டனி இசையில் அனைத்து பாடல்களுமே இன்றளவும் விஜய் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து வருகின்றன.
காமெடி, பன்ச் டயலாக், ஆட்டம் பாட்டம் என நடிகர் விஜய் ரசிகர்களுக்காகவே செதுக்கிய பக்கா கமர்ஷியல் படம் வேட்டைக்காரன், இப்போ தளபதி விஜய்க்கு இப்படியொரு படம் பண்ணா இன்னும் வெறித்தனமா இருக்கும் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.
வேட்டைக்காரன் படம் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும், படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் வெறித்தனமாக இருக்கும் என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

