நடிகை ரக்ஷிதாவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தம் படத்தில் சாணக்யா சாணக்யா பாடலை ரசிகர்கள் யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த பாடலின் நடுவே சிம்புவை பார்த்து ‘சத்யா ஏன் அப்டி பாக்குற’ என ரக்ஷிதாகேட்கும் விதம் அத்தனை அழகாக இருக்கும். தம் கொடுத்த வெற்றியினால் மதுர படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார்.
தமிழில் இரண்டு படங்களே நடித்திருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரக்ஷிதா. இளம் நடிகர்கள் முதல் மூத்த நடிகர்கள் வரை ரக்ஷிதாவை போட்டி போட்டு, தங்கள் படங்களில் நடிக்க வைத்தனர்.
தெலுங்கு மட்டுமின்றி கன்னட திரையுலகிலும் ஒரு கலக்கு கலக்கினார் ரக்ஷிதா. கன்னடத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த தைய மதிலு தான் அவர் நடித்த கடைசி படம். அதன் பிறகு வேறு எந்த மொழி படத்திலும் ரக்ஷிதாநடிக்கவில்லை. பிரேம் எனும் சினிமா இயக்குனரை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் செட்டிலாகிவிட்டார்.
ரக்ஷிதா, பிரேம் தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளான். திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய போதும், சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருப்பதால் அவரை இன்னமும் பல ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் ரக்ஷிதா சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. வழக்கம் போல் அவற்றை ரக்ஷிதா தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால், அந்தப் புகைப்படங்களில் ரக்ஷிதாவின் தோற்றத்தைப் பார்த்துர் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
காரணம் அவர் முன்பை விட அதிக உடல் எடை போட்டிருப்பது தான். பொதுவாகவே பூசியது போன்ற உடல்வாகு கொண்டவர் ரக்ஷிதா. ஆனால் தற்போது மேலும் உடல் எடை கூடி அடையாளமே தெரியாத அளவிற்கு அவர் மாறியுள்ளார். அதிலும் குறிப்பாக முகமும் அடையாளம் தெரியவில்லை என்பது தான் ரசிகர்களின் வருத்தமே

