மணிரத்னம் இயக்கத்தில் கல்கி எழுதிய வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடிக்கின்றனர். யார் யார் என்னென்ன கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது இன்னும் சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது. இருந்தாலும் அது பற்றிய சில தகவல்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
வந்தியத் தேவன் ஆக கார்த்தி, அருள்மொழி வர்மன் ஆக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலன் ஆக விக்ரம், நந்தினி ஆக ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகளாக ஏற்கெனவே வந்துள்ளன.
இந்நிலையில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமான பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விஷால் நடித்த ‘ஆக்ஷன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி.
கோடியக்கரையைச் சேர்ந்த படகோட்டும் பெண் கதாபாத்திரம் தான் பூங்குழலி. அருள்மொழி வர்மன் மீது காதல் கொள்பவர். தற்போது தாய்லாந்தில் அருள்மொழி வர்மன், பூங்குழலி, சம்பந்தப்பட்ட காட்சிகளில் தான் ஜெயம் ரவி, ஐஸ்வர்ய லட்சுமி நடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

