தமிழ் சினிமாவில் முக்கியமான ஹீரோக்களில் கார்த்தி, சிவகார்த்திகேயன் இருவரும் குறிப்பிட வேண்டியவர்கள். கார்த்தி 2006ம் ஆண்டு வெளிவந்த ‘பருத்தி வீரன்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். சிவகார்த்திகேயன் 2012ல் வெளிவந்த ‘மெரினா’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
இருவருமே குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான படங்களைக் கொடுப்பதால் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிக்கும் ஹீரோக்களாக இருக்கிறார்கள். சினிமாவுக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியானதில்லை. முதல் முறையாக இருவரின் படங்களும் வரும் 20ம் தேதி நேரடியாக மோத உள்ளன.
கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படங்கள் அன்று வெளியாகின்றன. இருவரது முந்தைய படங்களான ‘கைதி’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
அதற்கடுத்து அவர்கள் நடித்து இந்த வாரம் வெளிவரும் படங்கள் மீது இன்னும் பெரிய எதிர்பார்ப்பு எழவில்லை. முன்பதிவு நிலவரத்தைப் பார்த்தலே அது புரியும். அரையாண்டு தேர்வு நடப்பதால் கூட இப்படி இருக்கலாம். ஒரு வேளை படங்கள் வந்த பிறகு இது மாறலாம்.

