2018ம் ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த ஒரு நடிகையாக வரலட்சுமி சரத்குமார் இருந்தார். அதிலும் விஜய்க்கு வில்லியாக நடித்த ‘சர்கார்’ படம் அவருக்கு மிரட்டலான ஒரு பெயரைப் பெற்றுத் தந்தது.
அந்தப் படத்துடன் விஷால் நடித்த ‘சண்டக்கோழி’ படத்திலும் வில்லியாக நடித்தார். அதே சமயம் “மிஸ்டர் சந்திரமௌலி, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ ஆகிய படங்களில் கதாநாயகியாகவும், ‘மாரி 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். ஐந்து படங்களிலுமே அவருடைய நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் அமைந்தன.
ஆனால், 2019ல் அவர் நடித்த ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவந்தது ஆச்சரியமான ஒன்று. அவர் நாயகியாக நடித்த ‘நீயா 2’ படம் மட்டுமே வெளிவந்தது. இந்த ஆண்டு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட ‘கன்னி ராசி’ படம் வெளிவரவில்லை.

