ஜோக்கர், ஆண்தேவதை’ படங்களில் நடித்த ரம்யா பாண்டியனுக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லை. சேலையில் கவர்ச்சி காட்டி வாய்ப்பை பெறலாம் என போட்டோ ஷூட் நடத்தினார். அது பற்றி பரபரப்பாக பேசப்பட்டதே தவிர வாய்ப்பு வந்தபாடில்லை.
சமீபத்தில் அவர் பெயரில் போலியான சமூகவலைதள கணக்கு தொடங்கி ஆபாசமான போட்டோக்களை சிலர் பதிவிட்டனர். நான் அவள் இல்லை என விளக்கம் கொடுத்தார். இனியும் போர்த்திக் கொண்டு நடித்தால் கதையாகாது என முடிவுக்கு வந்துவிட்டாரோ என்னவோ, முதன்முறையாக அவரே கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் உலவ விட்டுள்ளார்.

