Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மூடியபடி ஊர் சுற்றிய பிரபல நடிகை

December 16, 2019
in Cinema
0

முகத்தை மூடிக் கொண்டு ஊர் சுற்றிய போதும் நடிகை ஜான்வி கபூரை ரசிகர்கள் சரியாக அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். பொதுவாகவே பிரபலங்கள் என்றால் புகழ் இருப்பது போலவே, சில சிரமங்களும் இருக்கத்தான் செய்யும். அதில் ஒன்று தான் பொது இடங்களுக்கு சுதந்திரமாக வர முடியாதது. அதிலும் சினிமா நட்சத்திரங்களுக்கு இந்தப் பிரச்சினை ரொம்பவே அதிகம்.

வெளியிடங்களில் அவர்களைப் பார்க்கும் போது ரசிகர்கள் ஆட்டோகிராப், செல்பி என மொய்க்கத் தொடங்கி விடுவர். இதனால் அவர்களது தனிமை பாதிக்கப்பட்டு விடும். இந்த சிரமங்களைத் தவிர்ப்பதற்காகவே சில பிரபலங்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகத்தை மூடிக் கொண்டோ அல்லது முகத்தை மறைப்பது போன்ற தொப்பி அணிந்து கொண்டோ செல்வது வழக்கம். அந்தவகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது நண்பர்களுடன் வாரணாசியில் ஊரை சுற்றிப் பார்த்துள்ளார். அப்போது தன் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு அவர் இருந்துள்ளார். ஆனாலும் அவரை அடையாளம் கண்டுகொண்டனர் ரசிகர்கள்.

தற்போது அவர் முகத்தை மூடியபடி மார்க்கெட் ஒன்றில் செல்லும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஏற்கனவே அவர் ஜிம்முக்கு செல்லும் புகைப்படங்கள் முதற்கொண்டு இணையத்தில் வெளியாவது வழக்கம். அந்தளவிற்கு ரசிகர்கள் அவரைப் பின் தொடர்ந்து வருகின்றனர். சமயங்களில் அவர் ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்டதும் உண்டு. அப்படி இருக்கையில் தைரியமாக இப்படி முகத்தை மூடிக் கொண்டு மார்க்கெட்டிற்கு சென்றிருக்கிறாரே என ஜான்வியின் செயலைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Previous Post

என்னோட தளபதி, சூப்பர் ஸ்டார், தல, உலகநாயகன்..

Next Post

பிக்பாஸ் பிரபலத்தின் தீயாய் பரவும் போட்டோ

Next Post

பிக்பாஸ் பிரபலத்தின் தீயாய் பரவும் போட்டோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures