ரஜினியின் அடுத்த படத்தை, நடிகர் தனுஷ் தயாரிக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இதில் அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். தலைவர் 168 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. டி.இமான் இசை அமைக்கிறார். இதில், காமெடியனாக சூரி நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், முன்னாள் ஹீரோயின்கள் குஷ்பு, மீனா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஷூட்டிங் ஐதராபாத், ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், ரஜினியின் 169 வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க இருப்பதாகவும் கலைப்புலி எஸ்.தாணு இணை தயாரிப்பு செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.