தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ராஷ்மிகா இணைந்துள்ள முதல் படம் சாரிலேரு நீகேவரு. விஜயசாந்தி ரீஎன்ட்ரி கொடுத்துள்ள இந்தபடம் ஜனவரி 10-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் பிரமோசன் தொடங்கியிருக்கிறது. தான் முதன்முதலாக ஒரு பிரபல ஹீரோயுடன் இணைந்திருப்பதால் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. மேலும் தெலுங்கில் வெளியான ஸ்மார்ட் சங்கர் படத்தை டிக்-டாக்கில் விளம்பரம் செய்தனர்.
அதேபோல் இப்போது மகேஷ்பாபுவின் சாரிலேரு நீகேவரு படத்தையும் டிக்-டாக்கில் விளம்பரம் செய்கிறார்கள். அந்த டிக்-டாக் பிரமோசனுக்காக ஒரு வீடியோவில் நடனமாடியிருக்கிறார் ராஷ்மிகா. இதையடுத்து அல்லு அர்ஜூனுடன் ஒரு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, அதைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரணுடன் தலா ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.

