கடந்த ஆண்டு வெளியான அடல்ட் காமெடி படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. விமர்சகர்கள் படத்தை கடுமையாக திட்டினாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்ற படம். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி உள்பட பலர் நடித்திருந்நதார்கள். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.
படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஏற்கெனவே ஹரஹரமகாதேவகி என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கினார். அதுவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. மூன்றாவதாக ஆர்யா நடித்த கஜினிகாந்த் படத்தை இயக்கினார். அந்தப் படம் தோல்வி அடைந்தது.
இதனால் மீண்டும் அடல்ட் காமெடி படத்துக்கே திரும்புகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். இதில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். நடிகர் சாம்ஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

