தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவர் மகேஷ்பாபு. டோலிவுட்டின் பிரின்ஸ் என அழைக்கப்படும் மகேஷ்பாபு, தற்போது நடித்துள்ள படம், சரிலேரு நீக்கெவ்வரு. இதில் ராணுவ வீரராக மகேஷ் பாபு நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை விஜயசாந்தி, முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
அனில் ரவிபுடி இயக்கியுள்ள இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் அடுத்த மாதம் 11ல் ரிலீசாகிறது. படத்தை 3 நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கின்றன. அதில் ஒன்று, ஹீரோ மகேஷ்பாபுவின் நிறுவனம். இந்நிலையில், இந்தப் படத்துக்காக, நடிகர் மகேஷ்பாபு சம்பளமாக 42 கோடி ரூபாய் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நடிகர் மகேஷ்பாபு வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தைக் காட்டிலும், இது இரு மடங்கு என கூறப்படுகிறது.
இந்த அளவுக்கான சம்பளத்தைத்தான் அவர் வாங்கினார் என்பது நிஜமானால், தெலுங்கு சினிமாவில் ஒரு ஹீரோ ஒரு படத்துக்கு பெற்ற அதிகபட்சத் தொகையாக அது இருக்கும் எனக் கூறப்படுகிறது.

