நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் ஹீரோ. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குறித்து போற்றிப் புகழ்ந்து பேசினார்.
அவர் பேசியதாவது:
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு, திரையுலகில் யாரும் இணையில்லை. நான் பார்த்த வரையில், அவர் மிகச் சிறந்த இசையமைப்பாளராக இருக்கிறார். காதலை அவர் இசையால் வெளிப்படுத்தும் விதம் அருமையாக இருக்கிறது. கல்லூரி நாட்களில் நான் சொல்ல முடியாமல் தவித்த காதலை, தன்னுடைய இசையால் சொல்லும் யுவனின் காதல் இசையை நான் உணர்ந்து ரசிக்கிறேன். இசைக்கும் காதல் உண்டு என்பதை யுவன் மூலம் உணர்ந்து இருக்கிறேன்.
இவ்வாறு சிவ கார்த்திகேயன் பேசினார்.

