பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் நடிகர் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.
நடிகர் ரஜினியின் 69 வது பிறந்தநாள் இன்று (டிச.,12) கொண்டாடப்படுகிறது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். பிறந்தநாளன்று தான் ஊரில் இருக்க மாட்டேன் என ரஜினி ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அவருக்கு வாழ்த்து கூற இரவு முதலே ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்து வருகின்றனர். இது தவிர சமூக வலைதளங்களிலும் ரஜினிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்தது. இதற்காக #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 2.54 லட்சம் பேர் கருத்து பதிவிட்டுள்ளனர். ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து, ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள் இதில் பதிவிடப்பட்டு வருகின்றன.

