2019ம் வருடத்தில் ஒவ்வொரு வாரமும் படங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. வருடத்தின் கடைசி மாதமான இந்த டிசம்பர் மாதத்தில் அதிக படங்கள் வெளியாகும் சூழல் உள்ளது. கடந்த வாரம் நான்கு படங்கள் வெளியான நிலையில் இந்த வாரம், நாளை டிசம்பர் 13ம் தேதி பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இப்போது 9 படங்கள் மட்டுமே வெளியாகும் என தெரிகிறது. நாளை காலையில் தான் இவற்றில் எத்தனை வெளியாகும் என்பது தெரியும். இன்றைய நிலவரப்படி டிசம்பர் 13 நாளை வெளியாக உள்ள படங்கள்..
1. 50 ரூவா
2. கேப்மாரி
3. சாம்பியன்
4. சென்னை டூ பாங்காக்
5. காளிதாஸ்
6. கருத்துக்களை பதிவு செய்
7. மங்குனி பாண்டியர்கள்
8. மெரினா புரட்சி
9. திருப்பதிசாமி குடும்பம்

