அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இந்தப் படம் படுதோல்வி அடைந்தது. தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. படத்தின் தயாரிப்பிலும், கதையிலும் தலையிட்டும், படப்பிடிப்புக்கு சரியாக வராமலும் சிம்பு நஷ்டம் ஏற்படுத்தியதாக மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக சிம்புவும், அவரது தந்தை டி.ராஜேந்தரும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அழைக்கப்பட்டு சமாதான பேச்சு வார்த்தை நடந்தது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி சிம்பு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பு வழக்கறிஞர். தற்போது விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இல்லை என்றும் தனி அதிகாரி தான் நிர்வாகத்தை கவனிக்கிறார் என்றும் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து விஷாலை விடுவிப்பதாக கூறியதுடன். விஷாலுக்கு பதிலாக தனி அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டது.

