மலையாளத்தில் ‛வெயில்’ என்ற படத்தில் நடிப்பதற்காக நீண்ட தலைமுடி வளர்த்திருந்த ஷேன் நிகாம், திடீரென்று தலைமுடியை குறைத்து வேறு படத்தில் நடிக்கச் சென்று விட்டதால் அந்தப்படம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அதன் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். ஷேன் நிகாம் படங்களில் நடிக்க சங்கம் தடைவிதித்து. இதனால் கோபம் அடைந்த ஷேன் நிகாம் தயாரிப்பாளர்கள் கோமாளிகள், தொப்பிகள் என்று தனது விமர்சனம் செய்தார். இது தயாரிப்பாளர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஷேன் நிகாம்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது: எனது பதிவு யாரையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். கடந்த காலத்தில் நான் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானபோது, அதைச் செய்தவர்களை நான் மன்னித்தேன், அதைப் போலவே, நானும் மன்னிக்கப்படுவேன் என்று நம்புகிறேன். நான் பொறுமையாக இருக்கிறேன். மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எது எப்படி இருப்பினும் கடவுள் என்னுடன் இருக்கிறார். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

