சி.வி.மஞ்சுநாதன் தயாரிப்பில், எஸ்.காளிங்கன் இயக்கத்தில், ஆரி — பூஜிதா பொன்னாடா ஜோடி, புதிய படத்தில் நடித்து வருகிறது.பெயரிடப்படாத இப்படம் குறித்து ஆரி கூறியதாவது
:இது, ‘மித்தலோஜிக்கல்’ வகை படம். அதாவது வரலாற்று காலத்தையும், தற்போதைய காலத்தையும் இணைக்கும் படியான கதையை கொண்டது.
அதே நேரம் வழக்கமான வரலாற்று படமாக இருக்காது. இப்பட கதாபாத்திரத்துக்காக, 10 கிலோ குறைத்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

